வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2017 (16:12 IST)

மோகன் ராஜாவையடுத்து தமிழ் ராக்கர்ஸுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் இயக்குனர்

வரும் 29ம் தேதி பலூன் படம்  ரிலீஸாகும் நிலையில் அப்படத்தின் இயக்குனர் சினிஷ் தமிழ் ராக்கர்ஸுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
இயக்குனர் மோகன் ராஜா மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த ''வேலைக்காரன்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாவதற்கு முன் இயக்குனர் மோகன் ராஜா வேலைக்காரன் படத்தை கொஞ்சம் தாமதமாக வெளியிட வேண்டுமென தமிழ்ராக்கர்ஸிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 
 
தற்பொழுது அதேபோல் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பலூன் படம் வரும் 29ம் தேதி ரிலீஸாகிறது. சினிஷ். ட்விட்டர் மூலம் தமிழ் ராக்கர்ஸிடம் கோரிக்கை வைத்துள்ளார். தனது டிவீட்டில் எப்படியும் தமிழ் ராக்கர்ஸை நிறுத்த முடியாது. தமிழ் ராக்கர்ஸ் பாஸ் கொஞ்சம் பாத்து பண்ணுங்க. ஒரு வாரம் டைம் குடுத்தீங்கன்னா என்னோட தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.