செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2017 (15:46 IST)

அஜித் படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிவின்பாலி

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் 58வது படமான ‘விசுவாசம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி நடிக்கவுள்ளதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த நிவின்பாலி, 'இது முற்றிலும் வதந்தி என்றும், அஜித் படத்தில் நடிக்க தன்னிடம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கவேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாகவும், அது சீக்கிரமே நிறைவேறும் என்றும் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ரிச்சி' திரைப்படம் தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.