வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (18:59 IST)

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன்!

திமிரு பிடிச்சவன் படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் தமிழரசன்.  பாபு யோகேஸ்வரன் இயக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். 


 
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு  தொடங்கியது. தமிழரசன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய ‘சைத்தான்’ படத்தில் ஒரு கேமியோ கேரடக்டரில்  ரம்யா நம்பீசன் ஏற்கனவே நடித்திருக்கிறார். இப்போது 
விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் இணைந்து நடித்து வருகிறார். தமிழரசன் படத்தில் வில்லனாக சோனு சூட் நடிக்கிறார். இவர்களுடன் பூமிகா, ‘யோகி’ பாபு, ‘ரோபோ’ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.