விஜய், சூர்யாவை அடுத்து பாலிடிக்ஸில் குதித்த விஜய் ஆண்டனி

Last Modified ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (20:05 IST)
விஜய் நடித்த சர்கார் திரைப்படம் அரசியல்வாதிகளை ஒரு கலக்கு கலக்கிய நிலையில் விரைவில் வெளிவரவிருக்கும் 'என்.ஜி.கே. திரைப்படமும் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய், சூர்யாவை அடுத்து விஜய் ஆண்டனியும் அரசியல் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். 'பாலிடிக்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்த படத்தை அனந்தகிருஷ்ணன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு சிரிஷ், பாபிசிம்ஹா நடிப்பில் வெளிவந்த 'மெட்ரோ'. படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
TD ராஜா தயாரிக்கவுள்ள இந்த படம் குறித்த தகவலை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து பாலிடிக்ஸ் என்ற பெயரில் ஒரு போஸ்டரையும் பதிவு செய்துள்ளார். பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் 'தமிழரசன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் 'பாலிடிக்ஸ்' படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :