’’காட்டேரி’’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்த காட்டேரி மடம் தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என ஸ்டுடியோ கிரீன் நிறிவனம் அறிவித்துள்ளது.
நடிகர் வைபவ், ஆத்மிகா, ஆகியோர் நடிப்பில் இயக்குநர் தீகை இயக்கத்தில் உருவாகியுள்ள படம், காட்டேரி. வரும் 25 ஆம் தேதி ரிலீஸாக இருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவி வருவதால் அனைவரின் நலனை கருத்தில் கொண்டு டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவிருந்த காட்டேரி படம் தற்காலிகமாக தள்ளி வைக்கிறோம் என ஸ்டுடியொ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.#Katteri