திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (07:18 IST)

புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது.. ரகசிய அறையில் 83 கிலோ..!

kanja
தெலங்கானா மாநிலத்தில் புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில் கஞ்சா கடத்துவதாக காவல்துறைக்கு  ரகசிய தகவல் வந்ததையடுத்து கன்கோல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது போலீசார் கண்ணில் எந்தப் பொருளும் சிக்கவில்லை.
 
இருந்தும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம் எழுந்ததால்  காரின் இருக்கைகளை எடுத்து பார்த்தபோது, அதில் ரகசிய அறைகள் அமைத்து 83 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
உடனே அந்த 83 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.  கஞ்சாவின் மதிப்பு ரூ.33 லட்சம் என தெரிவித்துள்ள போலீசார், இவை அனைத்தும் ஆந்திரா-ஒடிசா எல்லை மலை கிராமத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு கடத்தப்பட இருந்ததாக கூறினர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva