தயாரிப்பாளர் மேல் மி டூ புகார் கூறியுள்ள ரெஜினா!
நடிகை ரெஜினா சினிமாவில் நடிக்க ஆரம்பிக்கப் போகுபோது தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக சொல்லியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கண்டநாள் முதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரெஜினா அதன் பின்னர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன் மற்றும் மாநகரம் ஆகிய படங்களின் மூலம் முன்னணி நடிகையாக மாறினார். தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். இப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் தன்னிடம் ஆரம்பகாலத்தில் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக் கூறியுள்ளார். அதில் எனக்கு 20 வயது இருக்கும்போது ஒரு தயாரிப்பாளர் கதையை பற்றி சொல்லும்போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்கள் செய்யவேண்டி இருக்கும் என கூறினார். எனக்கு அது புரியவில்லை. அதனால் என் மேனேஜரிடம் கேட்டேன். அவர் விளக்கி சொன்னதும் எனக்கு புரிந்தது. பின்னர் அவரின் போனை எடுக்கவே இல்லை எனக் கூறியுள்ளார்.