1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 மார்ச் 2021 (18:13 IST)

கன்ஃபார்ம் ஆனது விஜய் 65 படத்தின் நாயகி… சம்பளம் இவ்வளவா?

விஜய் 65 படத்தின் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக வுள்ள தளபதி 65 படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாகக் கலக்கி வரும் பூஜா ஹெக்டேதான் விஜய்க்கு ஜோடியாக அடுத்த படத்தில் நடிக்கப் போகிறார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது ‘விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இந்த படத்தின் மூலம் அது நிறைவேறினால் சந்தோஷம். விரைவில் விஜய்யுடன் நடிப்பேன் என நம்புகிறேன்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது அவர்தான் கதாநாயகி என்பது உறுதியாகியுள்ளது. மேலும் அவருக்கு சம்பளமாக 3.5 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழில் இரண்டாவது படத்தில் நடிக்கும் கதாநாயகிக்கு இவ்வளவு சம்பளமா என்ற கேள்வி எழுந்துள்ளது.