1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (17:43 IST)

''பான் இந்தியா'' சினிமாவின் முன்னோடி இவர்தான் - அதிதி ஷங்கர்

இந்திய சினிமாவில் பான் இந்தியா சினிமாவுக்கு நீங்கள் தான் முன்னோடி என தன் தந்தை ஷங்கரை வாழ்த்தியுள்ளார் விருமன பட நாயகி அதிதி.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் தனது 59 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள்,  ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  விருமன் படத்தின் நாயகியும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தந்தையின் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில்,  எனக்கு சினிமா வாழ்க்கையை கொடுத்த மனிதரும், இந்திய சினிமாவில் பான் இந்தியா சினிமாவுக்கு முன்னோடியும், சினிமா திரையில் மனதைக் கவரும் காட்சிகளை இயக்குபவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.  ஒவ்வொரு  நாளும் என்னை கவர்ந்து கொண்டே இருக்கிறீர்கள் ஷங்கர் சார். ஆனால் என் அப்பாவாக இருப்பதற்காக உங்களுக்கு முதல் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.