1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (19:11 IST)

மற்றொரு பிரபல நடிகரின் படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவீஸ்!

udhayanidh
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பெரிய நடிகர்களின் படத்தை வாங்கி ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
ரஜினிகாந்த், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், கமலஹாசன் ஆகியோரின் படங்களை தொடர்ச்சியாக ரிலீஸ் செய்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது கார்த்தி நடித்துள்ள அடுத்த படத்தையும் ரிலீஸ் செய்ய உள்ளது
 
 கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது