1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (16:24 IST)

இன்று இரவு 7 மணிக்கு… ரெட் ஜெயண்ட் மூவிஸின் டிவீட் … மகிழ் திருமேனி பட அறிவிப்பா?

நடிகர் உதயநிதி ஸ்டாலின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சட்டசபை தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கால் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதையடுத்து இப்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்தினார் மகிழ் திருமேனி. இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவரின் அடுத்த ரிலீஸாக மகிழ் திருமேனி திரைப்படம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இன்று இரவு 7 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால் மகிழ் திருமேனி – உதயநிதி படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.