செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 9 டிசம்பர் 2017 (22:01 IST)

அமலா பால் தானாக விலகவில்லையாம்...

மலையாளப் படத்தில் இருந்து அமலா பால் தானாக விலகவில்லை என்கிறார்கள். ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ படத்தை இயக்கியவர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் தற்போது ‘காயம்குளம் கொச்சுண்ணி’ என்ற மலையாளப் படத்தை இயக்கி வருகிறார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், அமலா பால் தான் ஹீரோயினாக கமிட்டாகியிருந்தார்.
 
ஆனால், திடீரென இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அமலா பால். வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், இந்தப் படத்துக்கு டேட்ஸ் இல்லை என்று சொன்னார். ஆனால், உண்மை அதுவல்ல என்கிறார்கள்.
 
சொகுசு கார் வாங்கி புதுச்சேரியில் பதிவுசெய்த விவகாரத்தில், கேரள அரசுக்கு எதிராக நடந்து வருகிறார் அமலா பால். பஹத் பாசில் கேரள அரசுக்கு வரி செலுத்திவிடுகிறேன் என்று கூறிய நிலையில், இவர் மட்டும் முரண்டு பிடித்து வருகிறார். எனவே, படம் ரிலீஸ் சமயத்தில் அரசிடம் இருந்து சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தயாரிப்பாளரும், இயக்குநரும் சேர்ந்து அமலா பாலை நீக்கிவிட்டார்களாம்.