செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (13:26 IST)

வட்டார வழக்குத் தமிழைப் பேசுவது கஷ்டம் - நிவின் பாலி

‘வட்டார வழக்குத் தமிழில் பேசுவது கஷ்டமாக இருந்தது’ என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.


 
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் இன்று வெளியாகும் படம் ‘ரிச்சி’. இந்தப் படத்தில் ஹீரோக்களாக நிவின் பாலி மற்றும் நட்டி இருவரும் நடித்துள்ளனர். ஹீரோயின்களாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் லட்சுமிப்பிரியா சந்திரமெளலி நடித்துள்ளனர்.
 
“தமிழ் சினிமாவின் ரசிகன் நான். எனது இந்த முதல் நேரடி தமிழ்ப் படத்தில் நடித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 'ரிச்சி' ஒரு புது அனுபவமாக இருக்கும். கதையின் பின்னணியும், அணுகுமுறையும் அப்படி. 
 
இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிக சுவாரஸ்யமான மற்றும் சவாலான ஒன்று. இப்படத்திற்கு சொந்த குரலில் டப் செய்துள்ளேன். இதற்காக மிகவும் மெனக்கெட்டேன். ஏனென்றால், ஒரு  தமிழ் வட்டார பாஷயை பேசுவது சுலபமல்ல. 
 
இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். எல்லா சக நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்திற்காக பெருமளவு உழைத்துள்ளனர். இந்த எனது முதல் நேரடி தமிழ் படத்தின் ரிலீஸை ஆர்வத்துடன்  எதிர்நோக்கியுள்ளேன். நல்ல, சுவாரஸ்யமான சினிமாவை என்றுமே கொண்டாடும் தமிழ் சினிமா ரசிகர்கள் 'ரிச்சி' படத்தை நிச்சயம் ரசித்து பாராட்டுவார்கள் என நம்புகிறேன்” என்கிறார் நிவின் பாலி.