செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (16:23 IST)

கதை திருட்டு விவகாரத்தில் முருகதாஸ் மனமாற்றம்-பின்னணி என்ன?

சர்கார் கதை விவகாரத்தில் கோர்ட்டில் பார்த்துக்கொள்கிறேன் என சீறிய இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இன்று சமாதானமாக வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.

சர்கார் கதை திருட்டு பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்தே ஆவேசமாக பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்த இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அனைவரும் அதிர்ச்சியாடையும் விதமாக இன்று கோர்ட்டில் ராஜேந்திரனோடு சமாதானமாகப் போவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டைட்டிலில் ராஜேந்திரன் பெயரையும் போடுவதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். மேலும் அவருக்கான இழப்பீடாக ரூ30 லட்சத்தையும் கொடுக்க சம்மதித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பாக்யராஜ் திரை எழுத்தாளர்கள் சங்கத்தின் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதெல்லாம் ஆவேசமாகப் பேசிவிட்டு இப்போது திடீரென கோர்ட்டில் வருணிடம் முருகதாஸ் சரண்டார் ஆனதற்கான காரணம் என்னவென்று சினிமா ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

பிரச்சனை ஆரம்பித்தபோது சன்பிக்சர்ஸ், விஜய் போன்ற பெரிய தலைகள் நம்பக்கம் இருக்கிறார்கள் அதனால் இந்த கதை திருட்டு விவகாரம் பெரிய விஷயமாக மாறாது என எண்ணியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் விஜய்யோ படத்தில் நடித்ததோடு என் வேலை முடிந்தது. கதை சம்மந்தமான விவகாரத்தை நீங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியிருக்கிறார். விஜய்யின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனமும் முருகதாஸுக்குத் தரவேண்டிய சம்பளப்பக்கியை நிறுத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து தன் தரப்பு ஆட்களின் இந்த பின்வாங்கல்களால் முருகதாஸ் சிறிது கலக்கமடைந்திருக்கிறார்.
மேலும் ஆரம்பம் முதலே இந்த விஷயத்தில் பாக்யராஜ் வருணுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது முருகதாஸ் தரப்புக்கு கடும் பின்னடைவாக இருந்துள்ளது. அவர் அளித்த கடிதமும் வழக்கு விசாரணையின் போது வருணுக்கு ஆதரவாக செயல்படும் என வழக்கறிஞ்சர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடக்கும் எல்லா விஷயங்களும் தங்களுக்குப் பாதகமாக இருப்பதை உணர்ந்த முருகதாஸ் என்ன செயவது எனத் தெரியாமல் முழித்துள்ளார். மேலும் படரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால் வழக்கு நீண்டால் படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும் என தயாரிப்புத் தரப்பு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிகிறது.
இதையெல்லாம் யோசித்தப் பின்தான் வேறு வழியில்லாமல் முருகதாஸ் சமாதானத்திற்கு ஒத்துக்கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.