1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (08:29 IST)

ரவி தேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் டீசர் ரிலீஸ்!

தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படுபவர் ரவிதேஜா. இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. பல படங்கள் தமிழிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றுள்ளன. ரவி தேஜாவின் மார்க்கெட்டில் உச்சம் தொட்ட படம், கிக். தமிழில் தில்லாலங்கடி என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ரவி தேஜா, கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆன தமாகா படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். 40 கோடி ரூபாய் செலவில் உருவாகி வெளியான இந்த படம்  100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.

இதையடுத்து இப்போது அவர் வம்சி இயக்கத்தில் பேன் இந்தியா படமாக டைகர் நாகேஸ்வர ராவ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.