திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (14:16 IST)

விஜய்யின் லியோவுக்கு போட்டியாக மற்றொரு பேன் இந்தியா படம்!

தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படுபவர் ரவிதேஜா. இவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. பல படங்கள் தமிழிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றுள்ளன. ரவி தேஜாவின் மார்க்கெட்டில் உச்சம் தொட்ட படம், கிக். தமிழில் தில்லாலங்கடி என்ற பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் படங்களாக கொடுத்து வந்த ரவி தேஜா, சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆன தமாகா படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார். 40 கோடி ரூபாய் செலவில் உருவாகி வெளியான இந்த படம்  100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் இப்போது அவர் டைகர் நாகேஸ்வர ராவ் என்ற பேன் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஒருநாள் முன்புதான் விஜய்யின் லியோ படம் பேன் இந்தியா ரிலீஸாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.