திங்கள், 8 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2025 (14:57 IST)

எனக்குக் கடவுள் கொடுத்த பரிசுதான் கென்னிஷா… ரவி மோகன் நெகிழ்ச்சி!

எனக்குக் கடவுள் கொடுத்த பரிசுதான் கென்னிஷா… ரவி மோகன் நெகிழ்ச்சி!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவிக்கும் அவர் மனைவி ஆர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர்  ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பரஸ்பரம் பிரிய முடிவெடுத்துள்ளதாக ரவி தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. ஆனால் தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக ஆர்த்தி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இவர்கள் பிரிவுக்குக் காரணமாக பிரபல பாடகி கென்னிஷா பிரான்சிஸ் பெயர் சொல்லப்பட்டது.  கென்னிஷா மற்றும் ரவி மோகன் ஆகிய இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதை இருவருமே மறுத்தனர். ரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயம் ரவி மற்றும் கென்னிஷா ஆகிய இருவரும் ஒரே நிறத்தில் ஆடையணிந்து ஒன்றாக வந்து கலந்துகொண்டது மீண்டும் சர்ச்சைகள் கிளம்பக் காரணமாக அமைந்தது.

இந்நிலையில் இன்று ரவி மோகன் தன்னுடைய ‘ரவிமோகன் ஸ்டுடியோஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதில் அவரோடு கென்னிஷாவும் கலந்துகொண்டார். அப்போது கென்னிஷா பற்றிப் பேசிய ரவி “எனக்குக் கடவுள் கொடுத்த பரிசுதான் கென்னிஷா, ஒரு மனிதன் எங்காவது தேங்கி நின்றுவிட்டால் கடவுள் அவனுக்காக ஒருத்தரை அனுப்புவார். அப்படி எனக்கு அனுப்பப்பட்டவர்தான் கென்னிஷா” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.