நீ அதுக்குதான் லாயக்கு… சூர்யாவை அவமானப்படுத்திய அறிமுக இயக்குனர்!

Last Updated: வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:25 IST)

சூர்யா நடித்த நேருக்கு நேர் படத்தின் இயக்குனர் வசந்த் அவரை சாப்பிடதான் லாயக்கு என திட்டினாராம்.

இயக்குனர் வசந்த் சூர்யாவை 1996 ஆம் ஆண்டு சூர்யாவை நேருக்கு நேர் படத்தில் அறிமுகப்படுத்தினர். அதன் பின்னர் இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்நிலையில் இயக்குனர் வசந்த் தான் அறிமுகப்படுத்திய நடிகர் சூர்யாவின் சமீபத்தைய படமான சூரரைப் போற்று குறித்து பாராட்டி மிகப்பெரிய கடிதத்தை வெளியிட்டார். இந்நிலையில் நேருக்கு நேர் படத்தின் போது சூர்யாவுக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று அவரை வசந்த் கடுமையாக திட்டுவாராம்.

அதுபோன்ற சம்பவம் ஒன்றை சூர்யா பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் ‘நேருக்கு நேர் ஷூட்டிங் இடைவேளையின் போது நான் பிரியாணி நன்றாக இருந்தது என இயக்குனரிடம் சொன்னேன். அவரோ நல்லா சாப்பிடு நீ அதுக்குதான் லாயக்கு.’ என அவமானப்படுத்தி விட்டாராம். இதை நினைத்து சூர்யா இரவு முழுவதும் கண்ணீர் விட்டு அழுதாராம்.இதில் மேலும் படிக்கவும் :