1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:13 IST)

வாரிசு ராஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது இவர் தான் - அதுவும் பிரபல நடிகரின் மகள்!

கோலிவுட் சினிமாவின் ஆளுமைமிக்க நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியாகியது. அப்பா, அம்மா, அண்ணன்கள் என குடுத்து செண்டிமெண்ட் கொண்டு வெளியான இப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்றது. 
 
இப்படம் ஒரே வாரத்தில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தாவுக்கு டப்பிங் பேசிய பெண் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் குறித்த செய்திகள் தற்போது வைரலாகி வருகிறது. 
அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் எம்.எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா தான். இவர் ஏற்கனவே ராஷ்மிகாவுக்கு சுல்தான் படத்திலும் டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.