திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 7 ஜனவரி 2023 (15:15 IST)

பிடிக்கல்லான விடுங்க நான் கவலையே படமாட்டேன் - கூலா பதிலளித்த ராஷ்மிகா!

விமர்சனத்திற்கு பதிலளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா! 
 
நடிகை ரஷ்மிகா மந்தனா கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்பட்டு வருகிறார். 
 
அதன்படி பேட்டி ஒன்றில் தன்னுடைய திரைப்பயணம் குறித்தும் அதன் வெற்றிகளை குறித்தும்  பேசிய ராஷ்மிகா தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர் ரிஷப் ஷெட்டியையோ ரக்‌ஷித் ஷெட்டியை பற்றியோ எதுமே பேசவில்லை. இதனால் கன்னட திரைப்படங்களில் அவர் நடிக்க கூடாது என ரெட் கார்ட் கொடுத்து ஒதுக்கியது. 
 
பின்னர் பாலிவுட் சினிமாவில் மட்டும் தான் நல்ல நல்ல ரொமான்டிக் பாடல்கள் உள்ளது. தென்னிந்திய சினிமாக்களில் ஐட்டம் பாடல்கள், கவர்ச்சி குத்து டான்ஸ், கில்மா பாடல்கள் தான் உள்ளது என கூறி தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். 
 
பின்னர் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் மாலத்தீவில் தனிமையில் ஊர் சுற்றித்திரிவதை ரசிகர்கள் அம்பலப்படுத்தினர். இந்நிலையில் வாரிசு ஆடியோ லான்ச்சில் கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து கிண்டலுக்கு உள்ளாகினார். 
 
அது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா, ஒரு நடிகையாக மக்கள் எல்லோருக்கும் என்னை பிடிக்கும் என எதிர்க்கக்கூடாது. சிலர் பேசுவதை பேசிக்கொண்டே தான் இருப்பார்கள். பிடித்தவரக்ளுக்கு என் செயல் பிடிக்கட்டும். பிடிக்காதவர்கள் குறை கூறுவதை பற்றி நான் ஒருபோதும் கவலைபடமாட்டேன்.ஆனால், என்னை பிடித்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி உடையவளாக இருப்பேன் என கூறியுள்ளார்.