1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (14:48 IST)

இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிமேகலை. இவர்  இயக்கத்தில் உருவாகியுள்ள காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் கடந்தாண்டு வெளியானது.

இதில், இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில்,  போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
 

மணிமேகலைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  இயக்குனர் மணிமேகலைக்கு நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த விவகாரத்தில் மணி மேகலை மீது பல மா நிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு  உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததுடன் அவரைக் கைது செய்ய தடை விதித்துள்ளது.