எனக்கு ராஷ்மிகா தான் வேணும்.... அடம்பிடிக்கும் ஷங்கர்!
ஜெண்டில் மேன் படம் மூலமாக அறிமுகமான இயக்குனர் ஷங்கர் தனது படங்களின் பிரம்மாண்டங்களுக்காக தனித்து தெரிந்தார். இவர் தற்போது தெலுங்கு ஹீரோ ராம் சரணை வைத்து புதுப்படமொன்றை இயக்கி வருகிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் , ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் ராம் சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நடிகையாக ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்ய துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறாராம் ஷங்கர். இதற்கு தயாரிப்பாளர்களும் சம்மதம் தெரிவிக்க ராஷ்மிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் ஷங்கர்.