வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 ஜூலை 2021 (15:04 IST)

ஷங்கர் படத்தின் பணிகளை தொடங்கிய எஸ் எஸ் தமன்!

எஸ் எஸ் தமன் ஷங்கர் மற்றும் ராம் சரண் தேஜா இணையும் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இப்போது கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் மற்றொரு அப்டேட்டை படக்குழு சார்பாக வெளியிட்டுள்ளனர். அதில் இந்த படத்துக்காக இசையமைப்பாளராக எஸ் எஸ் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தமன். அதன் பின்னர் தமன் இசையமைப்பாளாராக அறிமுகமாகி இப்போது தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது படத்துக்கான பாடல் கம்போஸ் பணிகளை தொடங்கி விட்டாராம். இது சம்மந்தமாக ஷங்கரோடு இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.