1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (17:41 IST)

அட இந்த பொண்ணு நிஜமாவே Cute'தான்பா... நாய், கோழி , மாடுகளுடன் பேசும் ராஷ்மிகா!

"கிரிக் பார்ட்டி" என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் விஜய் தேவரக்கொண்டாவுடன் அவர் சேர்ந்து நடித்த படங்களான டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் அடித்து தென்னிந்திய சினிமா உச்ச நடிகையாக வலம் வந்தார்.


தமிழில் நேரடியாக ஒரு படம் கூட இன்னும் நடிக்கவில்லை என்றாலும் ஏகப்பட்டட தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறிவிட்டார். தற்போது நடிகர் கார்த்தியை வைத்து பாக்யராஜ் கண்ணன் இயக்கும் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார்.


இந்நிலையில் சமீபத்தில் பண்ணை வீட்டிற்கு சென்ற ராஷ்மிகா  அங்குள்ள கோழி, நாய் , மாடுகளுடன் பேசும் கியூட்டான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ராஷ்மிகா கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் சுற்றி வளைத்துவிட்டார். தற்ப்போது 5 அறிவுள்ள ஜீவன்களிடம் இவர் காட்டும் பாசம் நெஞ்சில் துளைபோட்டு இளசுகளின் இதயத்தில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார்.