செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Josep
Last Modified: வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (12:27 IST)

சரோஜா தேவி Part - 2 - பழங்காலத்து பாப்பாவாக மாறிய ரம்யா பாண்டியன்!

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரம்யா பாண்டியன் . அதன் பின்னர் வந்த ஆண் தேவதைப் படத்துக்குப் பிறகு வேறெந்த பட வாய்ப்பும் இல்லாமல் போராடி வந்தார்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் விதவிதமாக சேலை அணிந்து இடுப்பு புகைப்படங்களை பதிவேற்றி இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமானார். இதையடுத்து படவாய்ப்புள் கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்த்த ரம்யா பாண்டியனுக்கு அப்படி எதுவும் கிடைத்தபாடில்லை.

ஆனாலும், மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்கும் விதத்தில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருவதுடன் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வித விதமான போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்துவிட்டார். இந்நிலையில் தற்ப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்காக 60ஸ் காலத்து ஹீரோயின் போன்று பாவாடை தாவணியில் கிராமத்து பெண் போன்ற கெட்டப்பில் பங்கேற்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசி ஒருவர் "சரோஜா தேவி Part - 2" என அவரது தோற்றத்தை கிண்டலடித்துள்ளார்.