வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (15:02 IST)

மக்களுக்கு இதய நன்றி - விஜய்சேதுபதி பட இயக்குனர்

vijay sethupathy
தமிழ் சினிமாவில் தென்மேற்குப்பருவ காற்று படத்தில் விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகம் செய்தவர் சீனுராமசாமி. இப்படத்தை அடுத்து, தர்மதுறை, சமீபத்தில் ரிலீஸான மாமனிதன் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன.

இப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுபற்றி, இயக்குனர் தனது டிவிட்டர் பக்கத்தில். நிறுவனத்தின் நிருபர் அலைபேசியில்
#மாமனிதன் வெளியாகி 75 நாட்கள் கடந்தும்
அதன் தொடக்கம் முதல் வெற்றிவரை
இன்று  பேட்டி எடுத்தார்

முடிவில்

#இடிமுழக்கம் பற்றி சொன்னேன்
இந்த புது அனுபவத்தை தந்த
மக்களுக்கு இதய நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி நஅவரது  50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சீனு ராமசாமி இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

மேலும், சீனு ராமசாமி தற்போது ஜி வி பிரகாஷை வைத்து இடிமுழக்கம் படத்தை இயக்கியுள்ளார்  சூப்பர் குட் பிலிம்ஸ் மற்றும் வேல்ஸ் இண்டர்னேஷனல் பிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களோடு இது சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.. இந்த பட ரிலீஸுக்கு பிறகு விஜய் சேதுபதி 50 படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.