செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (09:55 IST)

விபத்தில் சிக்கிய ராஷ்மிகா இப்போது எப்படி இருக்கிறார்?... அவரே வெளியிட்ட பதிவு!

கன்னட சினிமாவில் இருந்து புறப்பட்டு இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் அவரை நேஷனல் க்ரஷ் என செல்லமாக அழைத்து வருகின்றனர். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

சமீபத்தில் அவர் பாலிவுட்டில் அனிமல் நடித்தார். அடுத்து தெலுங்கில் புஷ்பா 2, குபேரா மற்றும் தமிழில் ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் தெலுங்கில் அடுத்து நடித்து வரும் கேர்ள் பிரண்ட் படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்குகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் தான் ஒரு விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

அதில் “அன்புள்ள ரசிகர்களே சமீபகாலமாக நான் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இல்லாமல் இருந்ததற்குக் காரணம், ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதுதான். ஆனால் அதில் இருந்து மீண்டு, மருத்துவர்களின் அறிவுரைப்படி தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். உங்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுங்கள். ஏனென்றால் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. நமக்கு நாளை உண்டா என்பதே தெரியாது” எனக் கூறியுள்ளார்.