திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (15:45 IST)

கோவிட்19 டெஸ்ட், ஆங்காங்கே சானிடைசர் - சிக்கலில் சிக்கிய ராணா திருமணம்!

பாகுபலி படத்தை எடுத்தவர்களும் அதில் நடித்தவர்களும் மறந்தாலும் ரசிகர்கள் அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நடிகார் ராணா சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுக செய்தார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர் ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துவிட்டனர் . கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான்  ராணா - மஹீகா பஜாஜ்  நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதையடுத்து வரும் ஆகஸ்ட் 8ம் தேதி ஹைதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது. ஆனால், அது கொரோனா பிரச்னையால் சாத்தியமாகவில்லை. ராணா குடும்பத்தாருக்கு சொந்தமான ராமநாயுடு ஸ்டுடியோஸில் தான் திருமணம் நடக்கப் போகிறதாம்.

அத்துடன் இருவீட்டு உறவினர்கள் மட்டும் வெறும் 30 பேர் தான் கலந்து கொள்வார்களாம். அந்த 30 பேரும் கோவிட் 19 பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.  அத்துடன்  ஆங்காங்கே சானிடைசர் வைக்கப்படும். சமூக விலகல் கடைபிடிக்கப்பட்டு முழு பாதுகாப்பதுடன் இத்திருமணம் நடக்குமாம். கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த பின்னரே  திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவோம் என்று ராணாவின் அப்பா சொல்லிவிட்டார்.