திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 22 மே 2020 (08:25 IST)

என்னாது ராணாவுக்கு நிச்சயமே நடக்கலயா...? தந்தை சுரேஷ் பாபு தடாலடி!

பாகுபலி படத்தை எடுத்தவர்களும் அதில் நடித்தவர்களும் மறந்தாலும் ரசிகர்கள் அதை மறக்க மாட்டார்கள். எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த வகையில், அப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்த நடிகார் ராணா சமீபத்தில் தனது காதலி இவர் தான் என மஹீகா பஜாஜ் என்ற பெண்ணை அறிமுக செய்தார்.

இவர் ஒரு இண்டீரியர் டிசைனர், மாடல் என பன்முகம் கொண்டவர் ராணாவின் வீட்டிலும் அப்பெண்ணின் வீட்டிலும் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டதால் திருமண நிச்சயம் செய்து வைக்க பெற்றோர் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியது . இதற்கிடையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் நேற்று ராணா - மஹீகா பஜாஜ் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் வெளியாகி போட்டோக்கள் வைரலானது. அந்த விசேஷத்தில் நடிகை சமந்தா - நாகசைதன்யா கலந்துகொண்டது செய்தியாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள ராணாவின் தந்தை சுரேஷ்பாபு,  "ராணாவிற்கு இன்னும் நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை. திருமணத்திற்கு முன்பும் , பின்பும் நடைபெறவிருக்கும் விஷேஷங்களுக்காக இரு வீட்டாரும் சேர்ந்து சில ஆலோசனைகளை செய்தோம். அப்போது எடுக்கப்பட்ட போட்டோவை வைத்து நிச்சயம் ஆகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துவிட்டது. இந்த சம்ரதாயம்  தெலுங்கு குடும்பங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுதான்” என்று கூறி விளக்கமளித்தார்.