ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (13:59 IST)

எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரூ..? ராணாவின் ஷாக்கிங் சேன்ஞ் ஓவர்

தெலுங்கு நடிகர் ராணாவின் சமீபத்தைய புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், பாகுபலி படத்தில் மிடுக்கான உடல் தோற்றத்துடன் நடித்து, உடல் அமைப்பில் பிரபாஸையே மிஞ்சிய அவர் தற்போது மெலிந்து காணப்படுகிறார். அவரை திடீரென பார்த்தால் அட்டையாளம் கூட தெரியவைல்லை. அவரது சில ரசிகர்களோ உடல் நலத்துக்கு ஏததேனும் பிரச்சனையோ என்றெல்லாம் குழம்பி வருகின்றனர். 
உண்மை என்னவெனில், வேணு உடுகுலா இயக்கி வரும் விரத பர்வதம் 1992 படத்திற்காக இப்படி ஒல்லி ஆகியிருக்கிறாராம் அவர். இந்த படத்திற்காகதான் ராணா இப்படி எலும்பும் தோலுமாய் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போய் உள்ளார். 
 
விரத பர்வதம் 1992 ராணாவிற்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். அவர் நடிக்கும் படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு, தனது உடல் எடையை கூட்டி குறைத்து மெனக்கெடும் ராணாவின் அர்ப்பணிப்பை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.