1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 21 மே 2021 (18:01 IST)

தடுப்பூசி போடும்போது கூட சிரித்து கொண்டே போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!

தடுப்பூசி போடும்போது கூட சிரித்து கொண்டே போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ரம்யா பாண்டியன். இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ரம்யா பாண்டியன் இன்று தனியார் மருத்துவமனையில் ஒன்றில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன 
 
ரம்யா பாண்டியன் என்றாலே எப்போதும் அவருடைய சிரிப்பு தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். அந்த வகையில் அவர் தடுப்பூசி போடும் போது கூட சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்ததை பல ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்