1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 20 மே 2021 (20:55 IST)

மனைவியுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் சூரி: வைரல் வீடியோ

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் இன்று தமிழகத்தில் சுமார் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர் என்பதும் 400 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் திரையுலக பிரபலங்கள் பலர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி இன்று தனது மனைவியுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது:
 
இன்னைக்கு நானும் என் மனைவியும் , பக்கத்துல இருக்குற மாநகராட்சி அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டோம். இந்த பயங்கரமான நோயிலிருந்து நம்மள காப்பாத்திக்க தடுப்பூசி ரொம்ப அவசியம். வாய்ப்பு கிடைக்கும் போது தவறாம தடுப்பூசி போட்டுக்குங்க. ஜாக்கிரதையா இருங்க.