ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:32 IST)

புஷ்பா இயக்குனரின் அடுத்த படத்தில் ராம்சரண்… லேட்டஸ்ட் தகவல்!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர்  இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. தற்போது,  அவர் ஷங்கர் இயக்கத்தில் கேம்சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய்யின் வாரிசு படத் தயாரிப்பாளர் தில்ராஜூ  தயாரித்து வருகிறார்.

இதையடுத்து அவர் உப்பென்னா படத்தின் இயக்குனர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தற்போது RC16 என அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக சாய் பல்லவியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை முடித்துவிட்டு ராம்சரண் அடுத்து சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது புஷ்பா 2 படத்தை இயக்கிவரும் சுகுமார் அடுத்து ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குவார் என சொலல்ப்படுகிறது.