1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 நவம்பர் 2020 (17:55 IST)

ரமணா வெளியாகி 18 ஆண்டுகள்… சிம்ரன் பகிர்ந்த நினைவு!

நடிகர் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்த ரமணா திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

விஜய்காந்தின் சினிமா வாழ்க்கையின் கடைசி ஹிட் படம் என்றால் அது ரமணாதான். ஆனால் இன்று வரை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அது உள்ளது. அந்த அளவுக்கு சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குனர் முருகதாஸ். கதை என்னவோ இந்தியன் படத்தின் மற்றொரு வடிவம்தான் என்றாலும் அவர் உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை ஈர்த்தன. உதாரணமாக தனியார் மருத்துவமனையில் இறந்தவருக்கு வைத்தியம் பார்க்கும் காட்சிகள். இந்நிலையில் இந்த  படம் வெளியாகி 18 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இதுபற்றி சமூகவலைதளத்தில் பேசியுள்ள நடிகை சிம்ரன் ‘ரமணா திரைப்படம் எப்போதும் அதற்குண்டான மரியாதையைப் பெறும். விஜயகாந்த் அவர்களுடன் நடித்தது மிகப்பெரிய ஆசிர்வாதம்’ எனத் தெரிவித்துள்ளார்.