தப்பு தப்பா ஒர்க் அவுட் செய்யும் ரகுல் பிரீத் சிங் - வைரல் வீடியோ!

Papiksha| Last Modified வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (14:28 IST)
தெலுங்கு தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து தெலுங்கி சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் அவரது மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது. 


 
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான என். ஜி.கே திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கிடையில் பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். இப்படி அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஆள் ரவுண்ட் அடிக்கும் பிரீத் சிங் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள படாத பாடுபட்டு வருகிறார். 
 
அந்தவகையில் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் டெட்லிஃப்டை தவறாக தூக்குறீங்க.. முதுகை நேராக வைத்து ஒர்க் அவுட் செய்யவேண்டும் இல்லையென்றால் அதிகமான வலி ஏற்படும் என்று கூறி அறிவுரை வழங்கி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :