வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 13 மே 2023 (21:18 IST)

நடிகைகள் முதலிடத்திற்கு போட்டிபோடுவது பற்றி நஷ்ரத் பரூச்சா கருத்து!

nushrat bharucha
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நஷ்ரத் பரூச்சா. இவர்  நடிகைகள் முதலிடத்திற்கு போட்டி போடுவது பற்றி கருத்து கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை  நஷ்ரத் பரூச்சா. இவர்  நடிப்பில் உருவாகியுள்ள படம் சத்ரபதி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.   இப்படத்தை  இயக்குனர் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகைகள் சினிமாவில் போட்டியிடுவது பற்றி கூறியுள்ளதாவது:  ‘’நடிகைகள் முதலிடத்திற்கு வர கவனம் செலுத்துகின்றனர். அதன் மீது எனக்கு நம்பிக்கையில்லை.  இப்போட்டி எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை.

நான் நடிக்க வந்த புதிதில், என் முகம் அழகாக இருக்காது என்று என்னை நீக்கினர்.  போஸ்டர்களை மட்டும் வைத்து படம் ஓட்ட முடியாது.  தற்போது இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.’’ என்று தெரிவித்துள்ளார்.