1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (20:11 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘கலக்க போவது யாரு ரக்சன்? ஜாக்குலினும் இணைவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘கலக்க போவது யாரு ரக்சன்?
பிக்பாஸ் நான்காவது சீசனின் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் இணையதளங்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே 
 
சமீபத்தில் நடிகர் ரியோ ராஜ், நடிகர் பாலாஜி முருகேசன் ஆகிய இரண்டு நடிகர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன
 
மேலும் நடிகைகள் சனம் ஷெட்டி, பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர், நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சஞ்சனா உள்பட ஒருசிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’கலக்கப்போவது யாரு’ புகழ் ரக்‌ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்த தகவலை இவர் மறைமுகமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜாக்லின் உடன் ரக்‌ஷன் செய்த ரகளை அனைவரையும் ரசிக்க வைக்கும் வகையில் இருந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ரக்‌ஷனை அடுத்து ஜாக்லினும் இணைவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்