புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:21 IST)

தனுஷ் பட நடிகையின் புது டாட்டு… பிக்பாஸ் டாட்டு என கேலி செய்யும் ரசிகர்கள்!

நடிகை அமைரா தஸ்தூர் புதிதாக போட்டுள்ள டாட்டுவை ஆசையாக ரசிகர்களுக்காக வெளியிட அதைக் கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அனேகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அமேரா தஸ்தூர். அதன் பின் ஜாக்கி சான் படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் புகழ்பெற்றார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கும் அவர் தன் பின் கழுத்தில் கண் போன்ற வித்தியாசமான டாட்டுவைப் போட்டுள்ளதை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ் சிம்பல் போல உள்ளதாக சொல்லி கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.