வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (13:23 IST)

பிக்பாஸ்- 4 சீசனில் நுழைந்த முன்னாள் போட்டியாளரின் காதலி!

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் முடிவடைந்து தற்போது நான்காவது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இது குறித்த முதல் புரோமோவை நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை அடுத்து பிக்பாஸ் நான்காவது சீசன் உறுதி செய்யப்பட்டது.

இந்த சீசனில் ரம்யா பாண்டியன், புகழ், ஷில்பா மஞ்சுநாத், சூர்யா தேவி, எலிசபெத் ஹெலன் ,பூனம் பாஜ்வா உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல நடிகை கிரண் ரத்தோட் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாள்தான் இந்த போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரிய வரும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 27 அல்லது அக்டோபர் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்து முதல் நாள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் முன்னாள் போட்டியாளரான தர்ஷனின் காதலியும் தர்ஷனின் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி கலந்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.