1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (12:49 IST)

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் ராஜூவின் மனைவி: கண்கலங்க வைக்கும் வீடியோ!

பிக்பாஸ் வீட்டிற்கு தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் ஏற்கனவே அக்ஷரா, சிபி, நிரூப் ஆகியோர்களின் குடும்பத்தினர் வந்த நிலையில் தற்போது ராஜுவின் மனைவி மற்றும் அம்மா வரும் காட்சிகள் அடுத்த புரமோ வீடியோவில் உள்ளது.
 
ராஜுவின் மனைவி வந்ததும் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு உணர்ச்சிவசப்படும் காட்சிகளும் அதேபோல் அவரது அம்மாவையும் ராஜ் கட்டிப்பிடிக்கும் காட்சிகளும் இன்றைய அடுத்த புரமோ  வீடியோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து இன்று மற்றும் நாளை பிரியங்கா, தாமரை, வருண், சஞ்சீவ், அமீர், பாவனி உள்பட மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது