புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (19:02 IST)

பிக்பாஸ் ரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’ டீசர் ரிலீஸ் தேதி!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரியோ நடித்த திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த படம் வரும் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டீஸர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது
 
பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஒருசில பாடல்கள் வெளியாகி வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ரியோ ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது