1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (15:14 IST)

படம் போக போக ஒரு மாதிரி ஆயுடுச்சு! – விஸ்வாசம் குறித்து ரஜினிகாந்த் ஓபன் டாக்!

நடிகர் ரஜினிகாந்த், முன்னதாக வெளியான விஸ்வாசம் படத்தை பார்த்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் அண்ணாத்த. இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தாலும் விமர்சன ரீதியாக பலர் எதிர் கருத்துகளையும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஹூட் ஆப்பில் பேசியுள்ள நடிகர் ரஜினிகாந்த் “விஸ்வாசம் படம் இவ்ளோ ஹிட் ஆக என்ன காரணம்னு படம் பாக்க ஆரம்பிச்சேன். படம் போக போக, க்ளைமேக்ஸ் வர வர படத்தோட கலரே சேன்ஜ் ஆயிட்டு. என்னையே அறியாம கை தட்டிட்டேன். சூப்பர் படம்” என தெரிவித்துள்ளார்.