ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 நவம்பர் 2021 (10:50 IST)

இளையராஜாவின் இசையை நீக்கினாரா மணிகண்டன்… கடைசி விவசாயி சர்ச்சை!

இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ள கடைசி விவசாயி படத்துக்கு இளையராஜாதான் முதலில் இசையமைக்க ஒப்பந்தம் ஆனார்.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் ஆனார்.

இந்நிலையில் அவரின் பின்னணி இசையமைப்புக் குறித்து திருப்தி இல்லாததால் அவற்றை அப்படியே நீக்கிவிட்டாராம் மணிகண்டன். பின்னர் ரிச்சர்ட் ஹார்வி என்ற வெளிநாட்டு இசையமைப்பாளரை பயன்படுத்தி பின்னணி இசையை உருவாக்கியுள்ளாராம். பின்னணி இசை அமைப்பதில் இந்தியாவிலேயே சிறந்த இசையமைப்பாளர் எனப் பெயர்பெற்றவர் இளையராஜா. அவரின் இசையையே மணிகண்டன் பிடிக்கவில்லை என நீக்கி இருப்பது அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.