1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 15 நவம்பர் 2021 (13:32 IST)

#westandwithsurya: நடிகர் சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு!

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது என்ற அடிப்படையில் சில சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது.
 
முக்கியமாக அதில் வில்லனாக வரும் போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமுதாயம் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளதன் மேல் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜெய்பீம் படத்தை முன்வைத்து சூர்யாவுக்கு வெளியில் இருந்து பல விமர்சனகள் எழுந்து வருகிறார். 
 
மேலும், நடிகர் சூர்யா மீது தனிநபர் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் #westandwithsurya என்ற ஹேஸ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. இதனை சூர்யா ரசிகர்கள் ஒன்றுகூடி அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.