1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2023 (16:21 IST)

ரொம்ப தமாசா பேசுறீங்க போங்க..! ஷூட்டிங் இடையே கமல்ஹாசன் – ரஜினி சந்திப்பு! – வைரலாகும் புகைப்படங்கள்!

Rajini Kamal
நீண்ட காலம் கழித்து ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் சந்தித்துக் கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.



தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களாகவும், இன்னமும் ஸ்டார் ரேட்டிங் குறையாமல் தொடர்ந்து இளம் நாயகர்களுக்கு போட்டியாக படங்களை நடித்து வருபவர்களுமாக உள்ளவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமல்ஹாசனும்.

இருவரும் தங்கள் இளமைக் காலங்களில் 16 வயதினிலே, இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படிதான் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது தனித்தனியாக படங்கள் நடித்து வந்தாலும் பல காலமாக தங்கள் நட்பை தொடர்ந்து வருகின்றனர். தற்போது நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 170 படப்பிடிப்பும், கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பும் சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பிற்கு இடையே சந்தித்து கொண்ட இருவரும் இளமை காலங்களை போலவே கட்டிபிடித்து வரவேற்று சிரித்து பேசியுள்ளனர். இருவரும் இதே போல ஒரே இடத்தில் படப்பிடிப்பின்போது சந்தித்துக் கொள்வது 21 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை ஆகும். இருவரும் இரு துருவங்களாக தமிழ் சினிமாவில் விளங்கும் நிலையிலும் தங்களுக்குள் இவ்வளவு நல்ல நண்பர்களாக இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K