1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : திங்கள், 23 அக்டோபர் 2017 (11:02 IST)

‘மெர்சல்’ படத்தைப் பாராட்டிய ரஜினி

விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், அதனைப் பாராட்டியுள்ளார்.

 
விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘மெர்சல்’. தீபாவளிக்கு ரிலீஸான இந்தப் படம், எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. பாஜகவினர் வேறு இந்தப் படத்துக்கு இலவச விளம்பரம் தேடித்தர, இன்றுவரை எல்லா தியேட்டர்களும்  ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
 
பல்வேறு பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரஜினியும் இந்தப் படத்தைப் பாராட்டியுள்ளார். போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள மினி தியேட்டரில் நேற்று படம் பார்த்தார்  ரஜினி.
 
“முக்கியமான பிரச்னைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. வெல்டன்... ‘மெர்சல்’ டீமுக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார் ரஜினி. “உங்கள் ஆதரவுக்கு நன்றி” என அந்த ட்வீட்டிற்குப் பதில் அளித்துள்ளார் விஜய்.