திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 23 அக்டோபர் 2017 (08:28 IST)

விஜய்யின் 'மெர்சல்: ஒருவழியா ரஜினியும் ஆதரவு தெரிவித்துவிட்டார்!

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இதுவரை இல்லாத வகையில் பல சோதனைகளை சந்தித்து கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரிலீசுக்கு முன்னர் மட்டுமின்றி ரிலீசுக்கு பின்னரும் பாஜக தலைவர்களால் இந்த படத்திற்கு மீண்டும் சோதனை ஏற்பட்டது. 
 
ஜிஎஸ்டி உள்ளிட்ட ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வற்புறுத்திய நிலையில் படக்குழு அதிர்ச்சி அடைந்தது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக சமூக வலைத்தளங்கள், எதிர்க்கட்சிகள், ஒட்டுமொத்த திரையுலகமும் பாஜகவுக்கு எதிராகவும், மெர்சலுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்ததால் படக்குழுவினர் தைரியம் அடைந்தனர்.



 
 
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து தற்போது மெர்சலுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 'மெர்சல்' திரைப்படம் முக்கிய பிரச்சனையை அலசியுள்ளது. படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் என்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.