வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (07:32 IST)

துல்கர் சல்மான் & ராணா இணைந்து நடிக்கும் ‘காந்தா’ படம் தொடங்கியது!

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அனைத்து மொழி ரசிகர்களுக்கும் பரீட்சியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் நடிப்பில் உருவான சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெற்றி பெற்றது.

அதன் பின்னர் அவர் பேன் இந்தியன் ஸ்டார் ஆனார். தீபாவளியை முன்னிட்டு அவர் நடித்துள்ள லக்கி பாஸ்கர் என்ற திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து காந்தா என்ற திரைப்படம் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் துல்கர் சல்மானோடு, ராணா டகுபதி மற்றும் பாக்யஸ்ரி போஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிப் படமாக உருவாகவுள்ளது.