புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:39 IST)

பிரபல பாடகி கல்யாணி மேனன் உயிரிழப்பு!

பிரபல பின்னணி பாடகியும் இயக்குனர் ராஜிவ் மேனனின் தாயுமான கல்யாணி மேனன் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

இயக்குனர் ராஜிவ் மேனன் தமிழ் ரசிகர்களுக்கு இயக்குனராகவும், ஒளிப்பதிவாளராகவும் அறிமுகமானவர். அதே போல அவரின் தாயார் கல்யாணி மேனனும் ஒரு சினிமா பிரபலம்தான். மலையாளத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள அவர் தமிழிலும் சில பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக அவர் 96 படத்தில் காதலே காதலே பாடலை பாடினார்.

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.