ஹீரோவாகிவிட்டார் விஜய் டிவி பூவையார்.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!
விஜய் டிவி மூலம் பிரபலமான பூவையார், சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் புகழ்பெற்றவர் பூவையார் என்பதும், கானா பாடல்கள் அவரது அடையாளமாக இருந்தது என்பதும் தெரிந்தது.
மேலும், விஜய்யுடன் "பிகில்" படத்தில் நடித்த அவர், மீண்டும் "மாஸ்டர்" படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்த "மகாராஜா", பிரசாந்த் நடித்த "அந்தகன்" போன்ற படங்களில் நடித்த நிலையில், தற்போது அவர் நாயகனாக நடிக்க உள்ளார்.
"ராம் அப்துல்லா ஆண்டனி" என்ற படத்தில் தான் அவர் நாயகனாக நடித்துள்ள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னை வேளாங்கண்ணி ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஜெயவேல் என்பவர் இயக்கியுள்ளார்.
தற்போது "குக் வித் கோமாளி" சீசன் ஆறு நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் பூவையார், முதல் படத்தில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran